ADDED : ஏப் 07, 2026 06:59 AM

பா.ஜ., எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்த கட்சி எனவும், காந்தியை கொன்றவருடன் தொடர்பு எனவும் எதிர்க்கட்சிகள் அவதுாறு பரப்புகின்றன. நாட்டின் நலனுக்கு பாடுபடும் பா.ஜ., எப்போதும் உலக நலன் சார்ந்த இந்திய மரபில் நம்பிக்கையும் ஆழ்ந்த பற்றும் கொண்டுள்ளது.
- நிதின் கட்கரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,
வெளியேற்றவில்லை!
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியிலும் அசாமிலும் ஆட்சி செய்யும் பா.ஜ., இதுவரை ஊடுருவல்காரர்களை அகற்றவில்லை. இவ்விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்குகிறது. காங்., ஆட்சியில் 88,792 சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்றினோம். பா.ஜ., ஆட்சியில் 2,566 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
- மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்
வேலைவாய்ப்பை பாதிக்கிறது!
நம் நாட்டின் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா இருந்தாலும், இங்கு உயர்க்கல்வியின் தரம் கவலையளிக்கிறது. 2020ம் ஆண்டு முதல் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் 2.50 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். ஏ.ஐ., போன்ற மாற்றம் மாநில கல்வி முறையில் பிரதிபலிக்கவில்லை. இது, வேலைவாய்ப்பை பாதிக்கிறது.
- சுப்ரியா ஸ்ரீநாத்தே, செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ்
