UPDATED : மே 23, 2026 11:33 PM
ADDED : மே 23, 2026 11:32 PM
மேற்கு வங்கத்தில், முந்தைய திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த வேலைவாய்ப்பு மோசடிகளால், தேசிய அளவில் மாநிலத்துக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டது. இனி, அது போன்ற சம்பவம் நடக்காது. அடுத்த மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய வேலைவாய்ப்பு கொள்கைக்கான மசோதா தாக்கல் செய்யப்படும். சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வர், பா.ஜ.,
'வாட்' வரியை குறையுங்க! பெட்ரோல், டீசல் விலை உயரும் போது, மாநில அரசின், 'வாட்' வரி வருவாய் தானாகவே அதிகரித்து அரசுக்கு கூடுதல் லாபமும் கிடைக்கிறது. இதனால், 'வாட்' வரியை ராஜஸ்தானில் ஆளும் பா.ஜ., அரசு குறைக்க வேண்டும். விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அசோக் கெலாட் மூத்த தலைவர், காங்கிரஸ்
மிகவும் ஆபத்தானது! நாட்டின் நற்பெயரை கெடுக்கவும், மத்திய அரசுக்கு எதிராக அவதுாறு பரப்பவும், 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற நையாண்டி டிஜிட்டல் இயக்கம், சில சமூக விரோதிகளால் துவங்கப்பட்டது. இது மிகவும் ஆபத்தானது. சில எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது கவலைக்குரியது. ராஜீவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்
