sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/சதி வெற்றி பெறாது!

சதி வெற்றி பெறாது!

சதி வெற்றி பெறாது!


UPDATED : மே 24, 2026 09:37 PM

ADDED : மே 24, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 09:37 PM ADDED : மே 24, 2026 08:11 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்களின் இதயங்களில் இருந்து பிரதமர் மோடியை அகற்றவோ, பா.ஜ.,வை வீழ்த்தவோ இயலாததால், நாடு முழுதும் வன்முறையைத் துாண்ட எதிர்க்கட்சியினர் முற்படுகின்றனர். இணையதளங்களில் போலி தகவல்களை பரப்பும் 'டூல்கிட்' கும்பலுடன் இணைந்து, நம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த காங்.,கின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் முயற்சிக்கின்றனர்; அவர்களின் சதி வெற்றி பெறாது. பீயூஷ் கோயல் மத்திய அமைச்சர், பா.ஜ.,

அதிருப்தியின் வெளிப்பாடு!

'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி சமூக ஊடக பக்கத்தை முடக்கியதால், அந்த இயக்கத்தை கண்டு மத்திய பா.ஜ., அரசு அஞ்சுகிறது. இது, நம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மீதான அதிருப்தியின் வெளிப்பாடு. இந்த இயக்கத்தை ஒடுக்கும் முயற்சி, ஜனநாயக உணர்விற்கு எதிரானது. பினராயி விஜயன் கேரள முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

அரசிடம் பணமில்லை!

பெண்கள், முதியோர்களுக்கான நிதியுதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாநில கருவூலம் முற்றிலும் காலியானதால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது. நிதி உதவிகள் எப்போது வழங்கப்படும் என்பதை பீஹார் அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும். தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us