'பாக்., உடன் பேச்சு நடத்த பிரிவினைவாதி யாசினை அனுப்பியது மன்மோகன் அரசு'
'பாக்., உடன் பேச்சு நடத்த பிரிவினைவாதி யாசினை அனுப்பியது மன்மோகன் அரசு'
ADDED : செப் 20, 2025 02:21 AM

புதுடில்லி: “பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுக்கு காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுப்பியது ஏன்?” என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு தலை வர் அமித் மாள்வியா கூறியதாவது:
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரிவினைவாதி யாசின் மாலிக், ஆக., 25ல் டில்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாதி அதில், மூத்த உளவு துறை அதிகாரிகளின் வேண்டுகோளின் படி, 2006ல் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் நிறுவனரும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தானில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின், அப்போதைய பிரதமர் மறைந்த மன்மோகன் சிங், யாசின் மாலிக்குக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார். யாசின் மாலிக் ஒரு பயங்கரவாதி.
சீருடையில் இருந்த மூன்று விமானப் படை வீரர்களை சுட்டுக் கொன்ற குற்றவாளி. அவரை அமைதி பேச்சுக்கு அனுப்பியது, அரசுக்கு எதிராக போரை ந டத்துவதற்கு சமம்.
யாசின் மாலிக் தெரிவித்து இருப்பது உண்மையென்றால், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அலட்சியமாக நடந்திருப்பது உறுதியாகிறது. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் ஹுரியத் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மறுபரிசீலனை அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை திசைதிருப்பவும், மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது அவதுாறு பரப்பவும், யாசின் மாலிக் விவகாரத்தை பா.ஜ., கையில் எடுத்து உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவமதிக்கும் பா.ஜ., ஹுரியத் தலைவர்களுடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நடத்திய சந்திப்பு குறித்தும், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னாவின் கல்லறைக்கு, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி புனி த யாத்திரை மேற்கொண்டது குறித்தும் பா.ஜ., விளக்க வேண்டும்.
கடந்த, 2011ல், பா.ஜ., எதிர்க்கட்சியாக இருந்தபோது, யாசின் மாலிக்கை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்கள் சந்தித்தது ஏன்? முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதுாறு பரப்புவதை விட, பா.ஜ., வரலாற்றை மறுபரி சீலனை செய்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.