உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 12, 2026 11:28 PM
அ நிறம் | அளவு
நொய்டா: உணவு தயாரிக்கும் போது, மாவில் எச்சில் துப்பிய பீட்சா கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் நொய்டா அருகேயுள்ள கிஜோர் கிராமத்தைச் சேர்ந்தவர் முஸம்மில்,30. நொய்டா, 22வது செக்டாரில், பீட்சா கடை நடத்துகிறார். சம்பவத்தன்று, பீட்சா தயாரிக்க மாவு பிசையும் போது, அதில் எச்சில் துப்பியுள்ளார்.
இது குறித்த வீடியோ காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய, நொய்டா, 24வது செக்டார் போலீசார், கடையில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மாவில் எச்சில் துப்பியது உறுதியானதை அடுத்து, வழக்குப் பதிவு செய்து, முஸம்மிலை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.
