கேரள அரசின் திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர் மம்முட்டி, 9 விருதுகளை அள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ்
கேரள அரசின் திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர் மம்முட்டி, 9 விருதுகளை அள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ்
ADDED : நவ 03, 2025 05:29 PM

திருவனந்தபுரம்: கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 9 பிரிவுகளில் மஞ்சுமல் பாய்ஸ் படம் தேர்வாகி உள்ளது.
பல்வேறு பிரிவுகளின் கீழ், 2025ம் ஆண்டுக்கான கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் இன்று (நவ.3) அறிவிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சாஜி செரியன் இந்த விருது விவரங்களை வெளியிட்டார். சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரமயுகம் படத்திற்காக அவர் சிறந்த நடிகராக தேர்வாகி உள்ளார்.
சிறந்த நடிகையாக பெமினச்சி பாத்திமா படத்தில் நடித்த ஷம்லா ஹம்சா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். சிறந்த இயக்குநராக சிதம்பரம் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கியவர்.
மஞ்சும்மல் பாய்ஸ் படம் மொத்தம் 9 விருதுகளை வென்றிருக்கிறது. அதன் விவரம்;
சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு(சிஜூ காலித்), சிறந்த துணைநடிகர்(சவுபின் ஜாகிர்), சிறந்த கலை இயக்கம்(அஜயன் சல்லிசேரி), சிறந்த ஒலிக்கலவை(சிஜின், பசல்), சிறந்த ஒலி வடிவமைப்பு(சிஜின் , அபிஷேக்), சிறந்த பாடலாசிரியர்(வேடன்)
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கியவர் சிதம்பரம். கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி இயக்கி இருந்தார். தென்னிந்திய சினிமாவில் பெரும் வெற்றியையும், வசூலையும் இப்படம் குவித்தது.

