/

செய்திகள்

/

இந்தியா

/

கரிம்புழை ராமனுக்கு சர்வதேச எழுத்தாளர் விருது

/

கரிம்புழை ராமனுக்கு சர்வதேச எழுத்தாளர் விருது

கரிம்புழை ராமனுக்கு சர்வதேச எழுத்தாளர் விருது

கரிம்புழை ராமனுக்கு சர்வதேச எழுத்தாளர் விருது


ADDED : ஜூன் 24, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, கல்பாத்தியை சேர்ந்த கரிம்புழை ராமனுக்கு, சர்வதேச எழுத்தாளர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தியை சேர்ந்தவர் கரிம்புழை ராமன். மேலாண்மைத் துறையில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் வகையில் இவர் எழுதிய 'விஜயகாதா' என்ற நூலுக்கு, சர்வதேச எழுத்தாளர் சிறப்பு விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

துபாயில் உள்ள மேரியட் பாம் ஜுமேராவில் நடந்த விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற கரிம்புழை ராமன் கூறியதாவது: 10 பதிப்புகள் வெளியிட்ட இந்த நூல், தங்கள் சொந்த முயற்சிகள் வாயிலாக நுண்ணறிவுகளை ஒரு உந்து சக்தியாக மாற்றி, வாழ்க்கையில் வெற்றியடைந்த திறமையான தொழில் முனைவோரை அறிமுகப்படுத்துகிறது.

கடினமான தடைகள் தாண்டி, வெற்றியடைய அவர்கள் ஏற்றுக் கொண்ட புதிய பணி, விளக்கம், இளைஞர்களுக்கு வெற்றிக்கான வழிகாட்டியாக இருக்கும். சாணக்கியரின் மேலாண்மை கொள்கைகளில் தொடங்கி, பகவத்கீதை மற்றும் சூத்திரங்களின் மேலாண்மை கொள்கைகளை அறிமுகப்படுத்தும் இந்த நூல், வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு சிறந்த உத்வேகமாக இருக்கும். இவ்வாறு, கூறினார்.