ADDED : ஜூன் 21, 2025 01:24 AM

ஆங்கிலம் என்பது அணை அல்ல; அது ஒரு பாலம்; வெட்கக்கேடானது அல்ல. ஆங்கிலம் என்பது சங்கிலி அல்ல; சங்கிலிகளை உடைக்கும் கருவி. இன்றைய உலகில் தாய் மொழியைப் போல் ஆங்கிலமும் முக்கியமானது. இது, வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், நம்பிக்கையையும் ஊக்குவிக்கிறது.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
வேற்றுமையில் ஒற்றுமை!
நம் நாட்டில் 97 சதவீத மக்கள், அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றை தங்கள் தாய்மொழியாக பயன்படுத்துகின்றனர். பேச்சு வழக்கில் உள்ள 19,500 மொழிகளை, தாய்மொழிகளாக பயன்படுத்துகின்றனர். இது, நம் நாட்டின் 'வேற்றுமையில் ஒற்றுமை'யை பறைசாற்றுகிறது.
டெரெக் ஓ பிரையன், ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்கிரஸ்
ஏன் இந்த போர்?
ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் அளவுக்கு அருகில் இல்லை என கூறிய இஸ்ரேல், இப்போது தாக்குதலை துவங்கியுள்ளது. எதற்காக இந்த போர்? இந்த மோதல் எவ்வளவு விரைவில் முடிவுக்கு வருகிறதோ அவ்வளவு நல்லது. இந்த போரால், 6,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி