ADDED : ஜூன் 03, 2026 01:49 AM

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., தோல்வி அடைந்திருந்தாலும், கட்சித் தொண்டர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன். அனைத்து தருணங்களிலும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நாடு தழுவிய போராட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
- மம்தா பானர்ஜி, தலைவர், திரிணமுல் காங்., கட்சி
60 சதவீத பங்களிப்பு!
தற்போதைய ரபி பருவத்தில், நாடு முழுதும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில், 60 சதவீத பங்களிப்பை தெலுங்கானா வழங்கியுள்ளது. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காக்க, 10,000 மெட்ரிக் டன் ஈரமான நெல்லையும் அரசு கொள்முதல் செய்துள்ளது. விவசாயிகளுக்கு உறுதுணையாக காங்., எப்போதும் இருக்கும்.
- ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்
இது மன்னராட்சி கிடையாது!
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அரசு பங்களாவை கேட்கிறார். அவரது தாய் ரப்ரி தேவியும் அரசு பங்களாவை கேட்கிறார். அவர்கள் அரசு சொத்துக்களை தங்களது பரம்பரை சொத்துக்களாக கருதுகின்றனர். இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது. சட்டப்படி பா.ஜ., நடவடிக்கை எடுக்கும்.
- சாம்ராட் சவுத்ரி, பீஹார் முதல்வர், பா.ஜ.,
