தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ரயில் பயணியர் பாதுகாப்புக்கு மனித வடிவ ரோபோ அறிமுகம்

ரயில் பயணியர் பாதுகாப்புக்கு மனித வடிவ ரோபோ அறிமுகம்

ரயில் பயணியர் பாதுகாப்புக்கு மனித வடிவ ரோபோ அறிமுகம்


ADDED : ஜன 23, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசாகப்பட்டினம்: பயணியரின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக முதல் மனித வடிவ ரோபோ, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மனித வடிவ ரோபோவின் பயன்பாடு, பல்வேறு துறைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு ரோபோவை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே போலீஸ் படையின் கீழ், இந்த மனித வடிவ ரோபோ இயங்கும் என கூறியுள்ளனர். இதற்கு 'ஏ.எஸ்.சி., அர்ஜுன்' என பெயரிட்டுள்ளனர். இந்த மனித வடிவ ரோபோவை, முழுமையாக விசாகப்பட்டினத்திலேயே உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் வடிவமைத்து உள்ளனர்.

இது பாதுகாப்பு கண்காணிப்பு, கூட்ட மேலாண்மை, துாய்மை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பொது அறிவிப்புகள் வெளியிடும். ஆர்.பி.எப்., போலீசாருடன் இணைந்து நடைமேடைகளில் ரோந்து பணிகளிலும் 'ஏ.எஸ்.சி., அர்ஜுன்' ரோபோவை ஈடுபடுத்த உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us