தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சிறுபான்மையினராகும் ஹிந்துக்கள்!

சிறுபான்மையினராகும் ஹிந்துக்கள்!

சிறுபான்மையினராகும் ஹிந்துக்கள்!


ADDED : பிப் 20, 2026 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 02:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுபான்மையினராகும் ஹிந்துக்கள்!

அசாமில், வரும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குள், அசாமியர் சமூகம் சிறுபான்மையினராகும் சூழல் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 2041ல் ஹிந்துக்களின் எண்ணிக்கைக்கு நிகராக முஸ்லிம்களின் எண்ணிக்கை அசாமில் உயர்ந்துவிடும். ஆனாலும், பா.ஜ., அரசு அளிக்கும் நம்பிக்கையில் அசாம் மக்கள் தைரியத்துடன் உள்ளனர்.

ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

ஏ.ஐ.,க்கு பயப்படுவதா?

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம், காங்கிரசால் உருவாக்கப்பட்ட ஒன்பது வீடியோக்களை பா.ஜ., அரசு நீக்கியுள்ளது. இது கோழைத்தனமானது. ஏ.ஐ., குறித்து பிரமாண்ட அறிக்கைகளை வெளியிடும் பிரதமர் மோடி அதை கண்டு அஞ்சுகிறார். அரசியல் விதிகளை அக்கட்சியினர் தவறாக பயன்படுத்துகின்றனர்.

சுப்ரியா ஸ்ரீநாத்தே சமூக ஊடகப்பிரிவு தலைவர், காங்.,

சி.பி.ஐ., விசாரணை தேவை!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த மத்திய அரசை கேரள முதல்வர் பினராயி வலியுறுத்த வேண்டும். இதில், பல அதிகார வரம்புகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதால், சிறப்பு புலனாய்வு குழுவால் எதையும் செய்ய முடியவில்லை.

ராஜீவ் சந்திரசேகர், கேரள பா.ஜ., , தலைவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us