மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு
மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு
ADDED : மே 17, 2026 11:59 AM

போபால்: மத்தியபிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில், திருவனந்தபுரம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் இன்று (மே 17) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ரயிலை நிறுத்தி, பாதிக்கப்பட்ட பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர்.
ரயில் பெட்டியிலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டில்லி-மும்பை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
