தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ போதைப்பொருள் வைத்திருந்தவர் குற்றவாளி என அறிவிப்பு

 போதைப்பொருள் வைத்திருந்தவர் குற்றவாளி என அறிவிப்பு

 போதைப்பொருள் வைத்திருந்தவர் குற்றவாளி என அறிவிப்பு


ADDED : மார் 18, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி, விற்பனைக்காக வைத்திருந்த ஹெராயின் போதைப்பொருளை மோஹித்குமார் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

கடந்த, 2017 செப்டம்பர் 15ம் தேதி, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மோஹித்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றங்களை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிபதி ஹர்விந்தர்சிங் ஜோஹல் விசாரித்து வந்தார்.

நேற்று அவர் மீதான குற்றங்கள், உறுதி செய்யப்பட்டன. விற்பனைக்காக சிறு பொட்டலங்களாக அவர் ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.

அவருக்கு என்ன தண்டனை என்ற விபரம் பின் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us