ADDED : மே 19, 2026 12:48 AM

தொழுகைக்காகவோ அல்லது வேறு மத வழிபாட்டிற்காகவோ போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதை பா.ஜ., அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சாலைகள் என்பது பயணத்திற்காக உருவாக்கப்பட்டவை; வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்யுங்கள். போதிய இடமில்லை எனில் சுழற்சி முறையில் வழிபடுங்கள்.
யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
பணவீக்கம் அதிகரிப்பு!
பிரதமர் மோடி, சட்டசபை தேர்தல்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி இருந்தால், பெரும் அரசியல் இழப்புகளை சந்தித்திருப்பார். பொருளாதாரத்தின் உண்மை நிலையை மத்திய அரசு மறைத்ததால், மக்களால் அத்தியாவசியப் பொருட்களைக்கூட பெற முடியவில்லை.
மல்லிகார்ஜுன கார்கே தலைவர், காங்கிரஸ்
பிறந்த மண்ணில் விடுதலை!
மேற்கு வங்க அரசு பள்ளிகளில், 'வந்தே மாதரம்' பாடலை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவு பாராட்டுக்குரியது. நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க உதவிய இந்த பாடலுக்கு, பல ஆண்டுகளுக்கு பின் பிறந்த மண்ணில் விடுதலை கிடைத்துள்ளது. புதிய அரசின் நடவடிக்கைக்கு வாழ்த்துகள்.
வினோத் பன்சால் செய்தித்தொடர்பாளர், விஸ்வ ஹிந்து பரிஷத்
