/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

/

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்


UPDATED : மே 07, 2025 08:22 PM

ADDED : மே 07, 2025 04:09 AM

Google News

UPDATED : மே 07, 2025 08:22 PM ADDED : மே 07, 2025 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நள்ளிரவில் அதிரடியாக தாக்குதலை நடத்தியது நம் ராணுவம்.

பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டு இன்று நாடு தழுவிய போர் கால ஒத்திகையை மத்திய அரசு அறிவித்தது. இந்திய ராணுவம் இன்று (மே.07) நள்ளிரவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதலை துவக்கியது.

பொதுவாக போர் ஒத்திகை நடத்தப்பட்டால் அதன்பின் இரண்டு - மூன்று நாட்களில் அல்லது சில நாட்கள் கழித்தே போர் துவங்கும். அதே போன்று ஒத்திகைக்கு பின்பு தான் இந்தியா போரை துவக்கும் என பாகிஸ்தான் நம்பியிருந்த நிலையில் நம் ராணுவம் மிகவும் சாதுர்யமாக பாகிஸ்தானை ஏமாற்றி இரவோடு இரவாக பக்காவாக பிளான் செய்து பாகிஸ்தான் , மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமான மூலம் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலால் பாகிஸ்தான நிலை குலைந்து போயுள்ளது.

இந்திய ராணுவம் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியது.

அவசர நிலை பிரகடனம்


பாகிஸ்தானில் லாகூர், சியல்கோட் மற்றும் நம் அண்டை மாகாணமான பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது ; ஜெய்ஹிந்த்


நீதிநிலை நாட்டப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தன்னுடைய எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளது.அதில் தெரிவித்து இருப்பதாவது: பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் பாக்.,ராணுவநிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது ; ஜெய்ஹிந்த் என பதிவிட்டு உள்ளது.

பெண் ராணுவ அதிகாரிகள் பேட்டி

இந்தியா ராணுவ கர்னல் ஷோபியா குரேஷி , விங் கமாண்டர் லியோமிகா சிங் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது ; 25 நிமிடங்களில் பாகிஸ்தான் மீது சிந்தூர் ஆப்ரேஷன் நடத்தி முடிக்கப்பட்டது. 9 பாக்., பயங்கரவாத முகாம்கள் மீது 21 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. பொதுமக்கள் யாரும் பாதிக்காத வகையில் இந்த தாக்குதல் நடந்தது. ஆயுதங்கள் மிக கவனமாக கையாளப்பட்டன. பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. பாகிஸ்தான் தரப்பில் ஏதும் தாக்குதல் வந்தால் அதனை எதிர்கொள்ள நமது படை தயாராக உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.