வெள்ளி நகைகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு
வெள்ளி நகைகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு
ADDED : செப் 24, 2025 10:09 PM

புதுடில்லி: அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரையில் வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து கற்கள் பதிக்கப்படாத வெள்ளியின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துடன் இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 10 நாடுகள் கொண்ட குழுவில் தாய்லாந்தும் ஓர் உறுப்பினராகும்.
வெளிநாட்டு வணிகத் தலைமை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், இறக்குமதிக் கொள்கையானது 2026ம் ஆண்டு மார்ச் 31 வரை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம், வெள்ளி நகை இறக்குமதிக்கான கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்ய அரசிடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.