sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/சிபிஎஸ்இ தேர்வு விவகாரம்: சிரமத்திற்கு பொறுப்பு ஏற்பதாக தர்மேந்திர பிரதான் பேட்டி

சிபிஎஸ்இ தேர்வு விவகாரம்: சிரமத்திற்கு பொறுப்பு ஏற்பதாக தர்மேந்திர பிரதான் பேட்டி

சிபிஎஸ்இ தேர்வு விவகாரம்: சிரமத்திற்கு பொறுப்பு ஏற்பதாக தர்மேந்திர பிரதான் பேட்டி

23


ADDED : மே 28, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

23

ADDED : மே 28, 2026 03:40 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சிபிஎஸ்இ தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு பொறுப்பு ஏற்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ அமைப்பு நேற்றே விளக்கம் அளித்துவிட்டது. ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், யாரும் தப்பிக்க முடியாது என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். ராகுல் வேறு ஒருமனநிலைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் விரக்தி அடைந்துள்ளார். அவர் எஸ்ஐஆரை எதிர்த்தார். மின்னணு ஓட்டுப்பதி இயந்திரங்களையும், டிஜிட்டல் இந்தியாவையும் எதிர்த்தார். இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்துக்கு ஆதரவாக நிற்பதாக தெரியவில்லை.

சிபிஎஸ்இ விவகாரத்தை பொறுத்தவரை, அரசின் சார்பில் ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் நானே பொறுப்பு ஏற்கிறேன். மேலும் இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என கேட்டுக் கொள்கிறேன். இதை நான் முன்பும் கூறியுள்ளேன். அரசியலை பின்னர் செய்யாம். இப்போதைக்கு இந்த மாணவர்கள் மற்றும் தேர்வர்களின் மன அழுத்தம் மேலும் அதிகரிக்கக்கூடாது என்பதே மிக முக்கியமான விஷயம். யாருடைய வார்த்தைகளோ அல்லது நடத்தையோ மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

பின்னணி


சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விலைத்தாள்கள் இந்த ஆண்டு, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன. மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக வந்த பல மாணவர்கள் மற்றும் பெற்றோர் மதிப்பீட்டில் சந்தேகம் எழுப்பினர். விடைத்தாள்களை நேரடியாக பார்த்து எங்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன என அறிய விரும்பிய மாணவர்கள், ஸ்கேன் பிரதிகளுக்கு விண்ணப்பிக்க முயன்றனர்.

அப்போது சிபிஎஸ்இ இணையதளம் செயலிழந்தது. இதனால், மாணவர்கள் பல பிரச்னைகளை மேற்க்கொண்டனர். இதனை தீர்க்கும்படி சென்னை ஐஐடி மற்றும் ஐஐடி கான்பூருக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதுதவறு மட்டுமல்ல. இது திட்டமிட்ட சதி எனக்குற்றம்சாட்டியிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us