/

செய்திகள்

/

இந்தியா

/

சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'

/

சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'

சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'

சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'


UPDATED : மே 13, 2025 03:20 PM

ADDED : மே 13, 2025 01:56 PM

Google News

UPDATED : மே 13, 2025 03:20 PM ADDED : மே 13, 2025 01:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டு உள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் தேர்வுகள் சில வாரங்கள் முன்பு நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில் 12ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு முடிவுகள் இன்று (மே 13) அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த முடிவுகளின் படி ஒட்டு மொத்தமாக 88.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 7330 தேர்வு மையங்களில் கிட்டத்தட்ட 16,92,784 பேர் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 14,96,307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது கடந்தாண்டை விட இந்தாண்டு 0.41 சதவீதம் அதிகம் ஆகும்.

நாட்டிலேயே விஜயவாடா மண்டலத்தில் அதிக தேர்ச்சி (99.60%)பதிவாகி இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக, 2ம் இடத்தில் திருவனந்தபுரம் மண்டலம் (99.32%) உள்ளது. சென்னை மண்டலம் 97.39% பெற்று 3ம் இடத்தில் உள்ளது.

இதேபோன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி மொத்தம் 23.12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் திருவனந்தபுரம் மண்டலம் 99.79% பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. சென்னை மண்டலம் 4ம் இடத்தை (98.71%) பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து கொள்ளலாம். மேலும் https;//results.cbse.nic.in/ என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

பிரதமர் வாழ்த்து


பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களின் அர்ப்பணிப்பு,உழைப்பு மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த உயரத்திற்கு உங்கை ளகொண்டு சென்ற பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டோரின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும். இனிவரும் வாய்ப்புகள் அனைத்திலும் வெற்றி பெறுவோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதிப்பெண்களை பார்த்து சோர்வு அடைபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது: ஒரு தேர்வு உங்களை ஒரு போதும் வரையறுக்க முடியாது. உங்கள் பயணம் மிகப்பெரியது. உங்கள் பலங்கள் மதிப்பெண் பட்டியலைத் தாண்டிச் செல்கின்றன. நம்பிக்கையுடன் இருங்கள். ஆர்வத்துடன் இருங்கள். இன்னும் பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றன. இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.