ADDED : மே 28, 2026 11:05 PM

தெலுங்கு மக்களால் போற்றப்படும் ஒரே தலைவர் என்.டி.ராம ராவ். அவருக்கு, பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு சிறப்பிக்க வேண்டும் . அவர் நிறுவிய தெலுங்கு தேசம் கட்சி, தேசிய அரசியலை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்குதேசம் கட்சி
மா.கம்யூ.,வின் சதி!
மார்க். கம்யூ.,வைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் வெளியே அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், காங்., கூட்டணி ஆட்சியில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க நடந்த சதி. இதில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரமேஷ் சென்னிதலா கேரள அமைச்சர், காங்கிரஸ்
ராகுலின் கபட நாடகம்!
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான உரிமைகள் பற்றி பேசும் காங்., ராகுல், அப்பிரிவைச் சேர்ந்த தலைவர்களுக்கு உயர்ந்த பதவிகள் வழங்குவது இல்லை. கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையாவை நீக்கியதை அடுத்து, அக்கட்சி ஆளும் மாநில முதல்வர்களில், அப்பிரிவை சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை.
செஷாத் பூனாவாலா தேசிய செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
