/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரு கூட்ட நெரிசல் 11 பேர் பலி: நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

/

பெங்களூரு கூட்ட நெரிசல் 11 பேர் பலி: நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

பெங்களூரு கூட்ட நெரிசல் 11 பேர் பலி: நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

பெங்களூரு கூட்ட நெரிசல் 11 பேர் பலி: நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு


UPDATED : ஜூன் 07, 2025 10:10 PM

ADDED : ஜூன் 07, 2025 09:59 PM

Google News

UPDATED : ஜூன் 07, 2025 10:10 PM ADDED : ஜூன் 07, 2025 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களை பார்க்க திரண்ட ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்ற, ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரவேற்க, சின்னசாமி மைதானம் முன் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நெரிசலில் சிக்கி, ஆறு பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர். இது மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு அணி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிலர் பணியிட மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. மேலும் பெங்களூரு அணியும் நிவாரணத் தொகை அறிவித்து உள்ளது.

இந்நிலையில், மாநில அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளதாக, முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.