sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ அசாமில் நிறைவேறியது பொது சிவில் சட்டம்; முக்கிய அம்சங்கள் என்னென்ன? வாழ்த்து சொன்ன அமித்ஷா!

அசாமில் நிறைவேறியது பொது சிவில் சட்டம்; முக்கிய அம்சங்கள் என்னென்ன? வாழ்த்து சொன்ன அமித்ஷா!

அசாமில் நிறைவேறியது பொது சிவில் சட்டம்; முக்கிய அம்சங்கள் என்னென்ன? வாழ்த்து சொன்ன அமித்ஷா!

8


ADDED : மே 27, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

8

ADDED : மே 27, 2026 08:08 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குவஹாத்தி: அசாம் சட்டசபையில் இன்று (மே 27) பொது சிவில் சட்டம் நிறைவேறியது. உத்தராகண்ட், குஜராத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் இனி பொது சிவில் சட்டம் அமலில் இருக்கும்.

முக்கிய அம்சங்கள்

* அசாமில் இனி திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து தொடர்பான விஷயங்களில், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகளே அமலில் இருக்கும்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை யாரும் திருமணம் செய்ய முடியாதபடி கடும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

* மனைவிக்கு வியாதி ஏற்பட்டுவிட்டது, அவரால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை என்பதற்காக மறுமணம் செய்ய முடியாது.

* மனைவி உயிருடன் இருந்தால் ஓர் ஆண் வேறு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது.

* லின் இன் உறவு முறையில் வசிப்பவர்களும் அதனை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

* திருமணம் நடந்த 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்; 60 நாள் காலத்திற்குள் திருமணம் அல்லது விவாகரத்தை பதிவு செய்ய தவறினால் ரூ.10,000 அபராதத்தை செலுத்த நேரிடும்.

* லிவ்-இன் உறவில் இருக்க இருவருமே 21 வயது அல்லது அதற்கும் மேல் கொண்டவராக இருக்க வேண்டும். இதில் மதம் பிரச்னை கிடையாது.

சடட்சபையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியதாவது: பொது சிவில் சட்டமானது சீர்த்திருத்தத்துக்கானது. பெண்கள் நலன் சார்ந்தது. இதுவரை ஓர் ஆண் இறந்தால் மனைவிக்குதான் அவரது சொத்துகள் சென்று சேரும்.

பொது சிவில் சட்டத்தின்படி, மனைவி மட்டுமல்லாது அவரது பிள்ளைகள், பெற்றோரும் சொத்தில் சம உரிமை உண்டு.பழங்குடிகள் மத்தியில் லிவ்-இன் உறவுப் பழக்கம் இல்லை. அவர்கள் ஏற்கனவே காலங்காலமாகவே பொது சிவில் சட்டத்தை பின்பற்றி வருகிறார்கள் போல, அவர்களுக்கு இச்சட்டம் தேவையில்லை.

லிவ்-இன் உறவில் இருப்போர் அதை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஒரு நபர் ஒரு நேரத்தில் ஒருவருடன் தான் லிவ்-இன் உறவில் இருக்க முடியும். ஒருவரே அசாமில் ஒருவருடன், மும்பையில் இன்னொருவருடனும் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

அமித்ஷா வாழ்த்து

இது குறித்து சமூக வலைதளத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:அசாம் மக்களுக்கு வாழ்த்துகள்.பொது சிவில் சட்டம் என்பது பாஜ துவங்கப்பட்டதில் இருந்தே அதன் ஒரு தீர்மானமாக இருந்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில், பாஜ ஆளும் மாநில அரசுகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான சட்டங்களை இயற்றியுள்ளன.
உத்தராகண்ட் மற்றும் குஜராத்திற்குப் பிறகு, அசாம் இன்று பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தருணத்தில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கும், இந்த மசோதாவை ஆதரித்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சட்டதை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us