/

செய்திகள்

/

இந்தியா

/

அன்பு மட்டுமே தேவை!

/

அன்பு மட்டுமே தேவை!

அன்பு மட்டுமே தேவை!

அன்பு மட்டுமே தேவை!


ADDED : ஜூன் 01, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கு, என்னுடன் அரசியல் விளையாட்டு விளையாடும் பேராசை கொண்டவர்களே காரணம். அம்மா, அப்பா நீங்கள் தான் எனக்கு உலகம். உங்களை விட பெரியது எதுவுமில்லை. உங்கள் நம்பிக்கை, அன்பு மட்டுமே எனக்கு தேவை.

தேஜ் பிரதாப் யாதவ்

பீஹார் முன்னாள் அமைச்சர்

சுய விளம்பரம் தேவையா?


சுய விளம்பரம் செய்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். தன்னை தவிர வேறு யாரும் எதுவும் செய்திட முடியாது என நினைப்பதை விட்டு விட்டு, மக்களின் பிரச்னைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும். முதலில், தேர்தல் பிரசாரத்தில் இருந்து அவர் வெளியே வர வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே

தலைவர், காங்கிரஸ்

சிராக் போட்டியிட வாய்ப்பு!


பீஹார் மாநிலமே, தன் அரசியல் மையம் என, மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் தலைவருமான சிராக் பஸ்வான் கூறி உள்ளார். பீஹார் மக்களும் அவரை நேசிக்கின்றனர். இதை வைத்து பார்த்தால், பீஹார் சட்டசபை தேர்தலில் சிராக் பஸ்வான் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அருண் பாரதி

லோக்சபா எம்.பி., -

லோக் ஜனசக்தி ராம்விலாஸ்