உள்ளடக்கத்திற்கு செல்ல

உ.பி.,யில் பாலம் கட்டுமான பணியில் விபத்து; தொழிலாளர் 6 பேர் பலி
உ.பி.,யில் பாலம் கட்டுமான பணியில் விபத்து; தொழிலாளர் 6 பேர் பலி
ADDED : மே 29, 2026 08:47 AM

அ நிறம் | அளவு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடுமையான புயல் வீசியதால், கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
ஹமீர்பூரில் உள்ள பெத்வா ஆற்றின் குறுக்கே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, திடீரென கடுமையான புயல் காற்று வீசிய நிலையில், பாலம் சரிந்து விழுந்துள்ளது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
