ADDED : செப் 04, 2025 11:18 AM

பாட்னா: பீஹாரில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் 5 பேரும் தொழிலதிபர்கள் ஆவர்.
பீஹார் மாநிலம் பாட்னாவின் பர்சா பஜார் பகுதியில், கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் டிரைவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பீஹாரில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.