ADDED : செப் 16, 2025 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நம் கடற்படைக்கு எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
முதலாவதாக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ். அர்னாலா, கடந்த ஜூன் மாதம் நம் கடற்படையில் இணைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ்., ஆண்ட்ரோத் கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. 253 அடி நீளம் உடைய இந்த கப்பல் மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவை சேர்ந்த, 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ்' நிறுவனத்தால் கட்டப்பட்டது.
இது, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.