ADDED : ஜூன் 16, 2026 11:50 PM
இது தீர்வல்ல! மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் நடந்த பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிந்து மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொறுப்பான கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக்கோருவதை விட்டுவிட்டு, ‘டெலிகிராம்’ செயலியை முடக்குவது ஒருபோதும் தீர்வாகாது. மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
146 பேர் பாதிப்பு! கேரளாவில், கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை, ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்றால், 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஜூனில் மட்டும், 70 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பத்தனம்திட்டா, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இதுவரை எந்த பாதிப்பும் பதிவாகவில்லை கே.முரளீதரன் கேரள சுகாதார அமைச்சர், காங்கிரஸ்
கண்டறிய வேண்டும்! அயோத்தி ராமர் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பின்னால், சனாதனத்திற்கு எதிரான எந்த கும்பல் செயல்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி
