/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஐ.பி.ஓ., வரும் பியூஷன் சி.எக்ஸ்.,

/

ஐ.பி.ஓ., வரும் பியூஷன் சி.எக்ஸ்.,

ஐ.பி.ஓ., வரும் பியூஷன் சி.எக்ஸ்.,

ஐ.பி.ஓ., வரும் பியூஷன் சி.எக்ஸ்.,


ADDED : மே 27, 2025 09:49 PM

Google News

ADDED : மே 27, 2025 09:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வாடிக்கையாளர் சேவை மைய தீர்வுகளை அளித்து வரும் பியூஷன் சி.எக்ஸ்., புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட செபியிடம் விண்ணப்பித்துஉள்ளது.

கொல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு, கடந்த 2004ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 15 நாடுகளில், 40 வாடிக்கையாளர் சேவை மையங்களை கொண்டு உள்ளது.

இந்நிறுவனம், முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 600 கோடி ரூபாயும், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 400 கோடி ரூபாய் திரட்ட உள்ளது.

இதில், 292 கோடி ரூபாய் கடன்களை திருப்பி செலுத்தவும், 75 கோடி ரூபாயை துணை நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாகவும் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.