ADDED : மே 14, 2026 12:34 AM

நிப்டி
நேற்றைய வர்த்தகத்தில் நிப்டி ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், இறுதியில் 33 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி 100 குறியீடு' குறைந்தபட்சமாக 0.27 சதவீத உயர்வுடனும், ' நிப்டி மிட்கேப்100 குறியீடு' அதிகபட்சமாக 0.77 சதவீத ஏற்றத்துடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் அதிகரித்தும், 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும், 6 குறியீடுகள் குறைந்தும் காணப்பட்டன. இவற்றில், 'நிப்டி மெட்டல் குறியீடு' அதிகபட்சமாக 3.18 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ஐ.டி., குறியீடு' அதிகபட்சமாக 1.13 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,378 நிறுவனங்களின் பங்குகளில் 1,960 உயர்வுடனும், 1,300 சரிவுடனும், 118 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன.. நிப்டி இன்னமும் டெக்னிக்கலாக பலவீனமாகவே இருக்கிறது. ஏற்றம் வந்தால் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குறுகிய காலத்தில் சிறுசிறு புல்பேக்குகள் நடந்தாலுமே 23,700-24,000-லெவல்களை தாண்டாதவரை எந்த நேரத்திலும் இறக்கம் வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தற்போதைக்கு 23,620 மற்றும் 23,930களில் ஸ்ட்ராங்கான ரெசிஸ்டென்ஸையும் 23,250 மற்றும் 23,200-ல் ஸ்ட்ராங்கான சப்போர்ட்டையும் கொண்டிருக்கி்றது.
ஆதரவு 23,250 23,100 22,975
தடுப்பு 23,575 23,740 23,865
