தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கரடியின் பிடி சற்று இறுகியுள்ளது

 கரடியின் பிடி சற்று இறுகியுள்ளது

 கரடியின் பிடி சற்று இறுகியுள்ளது


ADDED : மே 13, 2026 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்திலேயே நடைபெற்ற நிப்டி வர்த்தகம், தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 436 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.94 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 3.17 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு குறைந்தபட்சமாக 0.35 சதவிகித இறக்கத்துடனும், 'நிப்டி ரியல்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 4.11 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,378 நிறுவனங்களின் பங்குகளில், 589 ஏற்றத்துடனும்; 2,723 இறக்கத்துடனும், 66 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. முக்கிய சராசரிகளுக்கு கீழே (இ.எம்.ஏ.,) நிப்டி நிறைவடைந்துள்ளது. இது குறுகிய கால அளவிலும், நீண்ட கால அளவிலும் நிப்டி பியரிஷாக இருப்பதையே காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., கரடிகளின் கை ஓங்கியுள்ளதையே காட்டுவதாக இருக்கிறது. 'ஸ்டொக்காஸ்டிக்' சற்று ஓவர் சோல்டாக இருப்பது ஒன்று மட்டுமே தற்போதைக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயமாக உள்ளது. இதனால் செய்திகள் ஆதரவாக இருந்தால், ஒரு சிறிய பவுன்ஸ் பேக் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. 23,200-ல் முக்கிய சப்போர்ட்டும், 23,750-ல் ஸ்ட்ராங்கானதொரு ரெசிஸ்டென்சும் இருக்கிறது. தற்போதைய சூழலில் ஏற்றம் தொடர, நிப்டி 23,980 என்ற லெவலை கடந்து மேலே செல்லவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us