டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 23,300ஐ தாண்ட முடியாமல் தடுமாறுகிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 23,300ஐ தாண்ட முடியாமல் தடுமாறுகிறது
UPDATED : ஜூன் 10, 2026 01:14 AM
ADDED : ஜூன் 10, 2026 01:08 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 23,259.05 23,279.40 23,104.45 23,242.10
நிப்டி நேற்று 136 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. முற்பகலில் சற்று இறங்கினாலும் நாளின் இறுதியில் 119 புள்ளிகள் உயர்வுடனே முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 1.86 சதவீதமும், 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.68 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடு ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 3.62 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.48 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,396 நிறுவனங்களின் பங்குகளில் 2,380 ஏற்றத்துடனும்; 904 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
![]() |
நிப்டி ஏற்றத்துடன் நிறைவடைந்த போதிலும் முக்கிய குறுகியகால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேதான் இன்னமும் இருக்கிறது. மொமெண்டம் ஆசிலேட்டர்களான ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., இன்னும் இறக்கத்துக்கு சாதகமான சூழலையே காட்டுகின்றன. 23,300 என்பதுதான் தற்போதைய வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கின்றது.
இதை தாண்டினால் 23,425 என்ற லெவல்வரை செல்ல வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 23,100 வலுவானதொரு சப்போர்ட்டாக இருக்கிறது. இதற்கு கீழே இறங்கினால் 23,000 மற்றும் 22,850 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
மொத்தத்தில் 23,300ஐ தாண்டும் வரை எப்போது வேண்டுமென்றாலும் இறக்கம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

