ADDED : மே 10, 2026 01:09 AM

நி றுவனங்கள் தங்களது பங்குகளை திரும்ப பெறும் 'பைபேக்' நடைமுறையில் சில மாற்றங்களை செய்வதற்கு செபி பரிந்துரைத்துள்ளது. செபி அறிவித்துள்ள பரிந்துரைகளுக்கு மே 29ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
பரிந்துரைகள் 1. நிறுவனங்கள் பைபேக் அறிவிப்பை வெளியிட்ட ஒரு வேலை நாளுக்குள் அனைத்து பங்குதாரர்களுக்கும் மின்னணு முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்
2. பங்கு சந்தை வழியாக பங்குகளை திரும்பபெறும் காலஅளவை 66 வேலை நாட்களாக குறைக்க வேண்டும்
3. பைபேக் நடவடிக்கைக்கு தனியாக இருந்த 'தனி வர்த்தக சாளரம்' நீக்கப்பட வேண்டும்; தற்போதுள்ள வரி முறைகளின்படி, சாதாரண வர்த்தக முறையே போதும் என்று செபி கருதுகிறது
4. பைபேக் நடைபெறும் காலத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் புரமோட்டர் பங்குகளை வர்த்தகம் செய்யாதவாறு முடக்க வேண்டும்
5. ஒரு நிறுவனம் பைபேக் செய்யும்போது, அதன் விளைவாக நிறுவனத்தில் 'பொது முதலீட்டாளர்களின் பங்களிப்பு' வரம்புக்கு கீழே குறையக்கூடாது
6. நிறுவனங்களில், இரண்டு பைபேக் நடவடிக்கைகளுக்கு இடையிலான கால இடைவெளியை நிறுவனங்கள் சட்டத்திற்கு (2013) ஏற்ப மாற்ற வேண்டும்
7. பைபேக் நடவடிக்கைக்கு வர்த்தக வங்கிகளை நியமிப்பதை கட்டாயமாக்காமல், விருப்ப தேர்வாக மாற்ற வேண்டும்.
