நிப்டியை விட அதிக வருவாய் கொடுத்த மியூச்சுவல் பண்டுகள்
நிப்டியை விட அதிக வருவாய் கொடுத்த மியூச்சுவல் பண்டுகள்
ADDED : மே 29, 2026 12:18 AM

அ நிறம் | அளவு
க டந்த நிதியாண்டின் 4வது காலாண்டில், கிட்டத்தட்ட 72 சதவீத மியூச்சுவல் பண்டு திட்டங்கள், 'நிப்டி 50 டி.ஆர்.ஐ.,' குறியீட்டை விட அதிக வருவாய் தந்துள்ளதாக, 'வெஞ்சுரா செக்யூரிட்டீஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
* 354 திட்டங்களை ஆய்வு செய்ததில், கிட்டத்தட்ட 62 சதவீத திட்டங்கள் தங்களது பெஞ்ச்மார்க் குறியீட்டை விட கூடுதல் வருவாயை தந்துள்ளன
* மியூச்சுவல் பண்டுகளில் முதலீட்டு வரவு 90,457 கோடி ரூபாயாக வலுவாக இருந்துள்ளது
* கடந்த காலாண்டில், 'நிப்டி 50' குறியீடு 14.60 சதவீதமும், 'பி.எஸ்.இ., மிட்கேப்' குறியீடு 13.40 சதவீதமும், 'பி.எஸ்.இ., ஸ்மால்கேப்' குறியீடு 15.30 சதவீதமும் சரிவை சந்தித்தன.
