ADDED : மே 18, 2026 12:19 AM

'முத்தூட் பின்கார்ப்' நிறுவனம், புதிய ஐ.பி.ஓ., வெளியீடு வாயிலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி திரட்ட நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐ.பி.ஓ.,வுக்கு முன்பாக, தற்போது 10 ரூபாய் முக மதிப்புள்ள ஒரு பங்கினை, 2 ரூபாய் முக மதிப்புள்ள 5 பங்குகளாக (1:5 என்ற விகிதத்தில்) பிரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால், பங்கின் விலை குறைந்து, சிறு முதலீட்டாளர்கள் எளிதாக வாங்க முடியும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் வரையும் நிதி திரட்டவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2025--26 நிதியாண்டின் மார்ச் மாத நிலவரப்படி, நிறுவனத்தின் நிர்வகிப்பு சொத்து மதிப்பு 56,185 கோடி ரூபாயாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 1,640 கோடி ரூபாயாகவும் இருந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
