வெள்ளியை வினியோகம் செய்ய தயாராகி வரும் எம்.சி.எக்ஸ்.,
வெள்ளியை வினியோகம் செய்ய தயாராகி வரும் எம்.சி.எக்ஸ்.,
ADDED : மே 19, 2026 01:05 AM

உள்நாட்டில் சுத்திகரிக்கப்படும் வெள்ளியை, தனது வர்த்தக தளத்தின் வாயிலாக வினியோகம் செய்வதற்கான பணிகளை, 'மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்' தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக, பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெற்ற உள்நாட்டு வெள்ளி சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு அண்மையில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகளை உயர்த்தியதுடன், வெள்ளி இறக்குமதியை 'கட்டுப்பாடற்ற' பிரிவிலிருந்து 'கட்டுப்படுத்தப்பட்ட' பிரிவுக்கு மாற்றியது. இதனால் உள்நாட்டு வெள்ளிக்கு தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள், எம்.சி.எக்ஸ்., தளம் வாயிலாக வெள்ளியை வினியோகிக்க ஏதுவாக, தங்கம் மற்றும் வெள்ளிக்கான 'எம்.சி.எக்ஸ்., குட் டெலிவரி' தகுதி நெறிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சுத்திகரிப்பு நிறுவனங்களை பட்டியலில் சேர்க்கும் நடைமுறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எம்.சி.எக்ஸ்., தெரிவித்துள்ளது.
