உள்ளடக்கத்திற்கு செல்ல

ஜப்பான் கடன் பத்திரங்கள் 29 ஆண்டுகளில் காணாத உச்சம்
ஜப்பான் கடன் பத்திரங்கள் 29 ஆண்டுகளில் காணாத உச்சம்
ADDED : மே 13, 2026 12:52 AM

அ நிறம் | அளவு
அ மெரிக்க நிதி அமைச்சர் 'ஸ்காட் பெசென்ட்' ஜப்பான் வருகை தந்துள்ள சூழலில், அந்நாட்டின் 10 ஆண்டு கால அரசு கடன் பத்திரங்களுக்கான வட்டி ஆதாயம் 2.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 1997ம் ஆண்டுக்குப் பிந்தைய உச்சமாகும்.
'யென்' மதிப்பை உயர்த்த, ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதங்களை விரைவாக அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 5 ஆண்டு பத்திரங்கள் 1.92 சதவீதமாகவும், 30 ஆண்டு கால பத்திரங்கள் 3.81 சதவீதமாகவும், 20 ஆண்டு பத்திரங்கள் 3.44 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன.
