ADDED : ஜூன் 02, 2026 07:07 AM

நே ற்று ஐ.டி., துறை பங்குகள் விலை உயர்ந்தன. 'நிப்டி ஐ.டி.,' குறியீடு ஒரே நாளில் 4 சதவீதம் வரை உயர்ந்து, வர்த்தக முடிவில் 2.66 சதவீதமாக முடிந்தது. பங்கு சந்தை சரிவில் முடிவடைந்தாலும் கூட, ஐ.டி., துறை ஏற்றத்தில் நிறைவடைந் தது.
முன்னதாக, 2026 தொடக்கத்தில் இருந்தே ஐ.டி., பங்குகளுக்கு சாதகமான சூழல் இல்லை. 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் ஏ.ஐ., தயாரிப்புகளால், ஐ.டி., துறையின் தொழில் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் ஐ.டி., பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன.
குறிப்பாக, பிப்ரவரி மாதத்தில் மட்டும் நிப்டி ஐ.டி., குறியீடு 19 சதவீதத்தை தாண்டி சரிந்தது. அதன்பிறகும் பெரிய மீட்சி இல்லை.
தற்போது உயர்வுக்கான காரணங்கள்
ஐ.டி., பங்குகள் மிக குறைவான விலைக்கு வர்த்தகமாகி வந்தது
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் ஐ.டி., துறை அழியாது என 'நுவாமா' வெளியிட்ட அறிக்கை
அமெரிக்க 'பெடரல் ரிசர்வ்' கடன் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு.
