தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மீண்டும் தலைதுாக்கும் போர் 2 மாத சரிவில் தங்கம் விலை

 மீண்டும் தலைதுாக்கும் போர் 2 மாத சரிவில் தங்கம் விலை

 மீண்டும் தலைதுாக்கும் போர் 2 மாத சரிவில் தங்கம் விலை


ADDED : மே 29, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ மெரிக்கா - ஈரான் இடையிலான புதிய ராணுவ மோதல்களால் அமைதி பேச்சுவார்த்தை மங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை நேற்று, 2 சதவீதம் வரை சரிந்து, ஒரு அவுன்ஸ், 4,374 டாலராக குறைந்து இரண்டு மாத சரிவை சந்தித்துள்ளது.

பிப்ரவரி மாத இறுதிக்கு பின், தங்கம் விலை, 17 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளதால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈட்டிய லாபங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இழக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையில் தனக்கு, 'திருப்தி இல்லை' என டிரம்ப் தெரிவித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதற்கிடையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும், வட்டி விகித உயர்வு பயமும், வலுவடையும் அமெரிக்க டாலரும் தங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

ஒருவேளை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறும் பட்சத்தில், தங்கம் விலை மேலும் சரிந்து, 4,000 முதல் 4,250 டாலர் வரை சென்று அங்கு ஆதரவை பெற வாய்ப்புள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us