UPDATED : ஏப் 30, 2026 02:07 AM
ADDED : ஏப் 30, 2026 01:58 AM

இந்திய ரூபாய் மதிப்பு நேற்று மேலும் சரிந்து 94.88 என்ற நிலையை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் குறையாததால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 103 டாலருக்கும் மேலாகவே நீடிக்கிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
'சன் பார்மா நிறுவனம் ஆர்கனான்' நிறுவனத்தை 11.75 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு ஒ ப்பந்தங்களில் ஒன்று. இதற்காக பெருமளவில் டாலர்கள் வெளியேறுவதால், ரூபாய் மதிப்பில் உடனடி அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்கு சந்தை மற்றும் கடன் சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை வெளியே எடுத்து வருவது ரூபாயின் பலவீனத்தை அதிகரித்துள்ளது.
![]() |
மார்ச் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.1சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி துறையின் வளர்ச்சி 5.9 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக குறைந்துள்ளதும் ரூபாய் மதிப்பிற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இடையூறுகளுக்கு மத்தியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஒரு வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ரூபாய் மதிப்பு 93.50 - 93.80 என்ற அளவில் ஆதரவையும், 94.50 - 94.80 என்ற அளவில் தடையையும் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

