ADDED : மே 30, 2026 12:10 AM

'ஏ சியன் பெயின்ட்ஸ்' நிறுவனம், தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 23 ரூபாயை இறுதி டிவிடெண்டாக வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ரிக்கார்டு தேதி ஜூன் 23 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பரில் வழங்கப்பட்ட இடைக்கால டிவிடெண்டு 4.50 ரூபாயையும் சேர்த்து, 2025-26 நிதியாண்டிற்கு ஒட்டுமொத்தமாக ஒரு பங்கிற்கு 27.50 ரூபாய் டிவிடெண்டாக பங்குதாரர்களுக்கு கிடைக்க உள் ளது.
இந்த டிவிடெண்டு அறிவிப்பால், நேற்றைய வர்த்தகத்தின் போது இதன் பங்கு விலை 2,748.20 ரூபாய் வரை அதிகரித்து, இறுதியில் 2,671.60 ரூபாயாக நிலைபெற்றது.
வருகிற ஜூலை 9ம் தேதி நடைபெறவுள்ள நிறுவனத்தின் 80வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் பெற்ற பிறகு, ஜூலை 13ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பிறகோ இந்த தொகை முதலீட்டாளர்களின் கணக்கில் செலுத்தப்படும் என தெரிகிறது.
