தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்திய மியூச்சுவல் பண்டு சந்தையில் நுழையும் 'ஆல்பாகிரெப்' நிறுவனம்

 இந்திய மியூச்சுவல் பண்டு சந்தையில் நுழையும் 'ஆல்பாகிரெப்' நிறுவனம்

 இந்திய மியூச்சுவல் பண்டு சந்தையில் நுழையும் 'ஆல்பாகிரெப்' நிறுவனம்


UPDATED : ஜூன் 08, 2026 01:39 AM

ADDED : ஜூன் 08, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 01:39 AM ADDED : ஜூன் 08, 2026 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆ ல்பாகிரெப்' நிறுவனம் செபியின் ஒப்புதலை பெற்று, வரும் ஜூலை 6 - 20ம் தேதி வரை தனது முதல் 'மல்டி-அசெட் அலோகேஷன் பண்டு' திட்டத்தின் மூலம் இந்திய மியூச்சுவல் பண்டு சந்தையில் கால்பதிக்கிறது.

ஏ.ஐ., மெஷின் லேர்னிங் மற்றும் மேம்பட்ட கணித மாதிரிகள் மூலம் இயங்கும் குவான்ட்டேட்டிவ் மற்றும் ஹைப்ரிட் உத்திகளில் கவனம் செலுத்தும் இந்நிறுவனம், அடுத்த 3 முதல் 5 ஆண்டு களில் 25,000 - 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க இலக்கு வைத்துள்ளது.

பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்யும் இந்த முதல் திட்டத்தை தொடர்ந்து, லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்-கேப் பங்கு களில் முதலீடு செய்யக் கூடிய டைனமிக் ஈக்விட்டி திட்டத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது.



ஏற்கனவே 52 நிறுவனங்கள், 85 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வரும் இந்திய மியூச்சுவல் பண்டு சந்தையில், தொழில்நுட்பம் சார்ந்த ஆல்பாகிரெப்பின் இந்த வரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.

குவான்ட்டேட்டிவ் டிரேடிங்


குவான்ட்டேட்டிவ் டிரேடிங் என்பது மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், முழுக்க முழுக்க கணித மாதிரிகள், புள்ளிவிபரங்கள் மற்றும் மேம்பட்ட கணினி மென்பொருள்களை பயன்படுத்தி, பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் ஒரு நவீன முறையாகும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us