24,100 மீண்டும் வலுவான ரெசிஸ்டென்ஸாக மாறி வருகிறது
24,100 மீண்டும் வலுவான ரெசிஸ்டென்ஸாக மாறி வருகிறது
ADDED : மே 16, 2026 12:25 AM

ஏற்றத்துடன் ஆரம்பித்து, 10:45 மணியளவில் 146 புள்ளிகள் எனும் அளவுக்கு சென்று, உடனடியாக இறங்கி, பின் ஏறுவதற்கு மூன்று முறை முயற்சி செய்து வெற்றி பெறாமல், நாளின் இறுதியில் 46 புள்ளிகள் இறக்கத்துடன் நிப்டி நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.33 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 0.61 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.98 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.93 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,366 நிறுவனங்களின் பங்குகளில், 1,215 ஏற்றத்துடனும்; 2,027 இறக்கத்துடனும், 124 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. குறுகிய கால அளவீட்டில், நிப்டி இறக்கம் காண்பதற்கான அழுத்தத்துடனேயே இருக்கிறது. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் சற்று நிலைபெறுவது, ஒரு ஆறுதலான விஷயமாக இருக்கிறது. ஆர்.எஸ்.ஐ., 45.13-ல் இருப்பது மற்றும் மேல்நோக்கி நகரத் தொடங்கிய 'ஸ்டொக்காஸ்ட்டிக்' போன்றவை ஒரு டெக்னிக்கல் புல்பேக்கிற்கு வழிவகுக்கக்கூடும். 23,850, -23,890-ல் வலுவான ரெசிஸ்டென்ஸும், 23,500-ல் முக்கிய சப்போர்ட்டும் இருக்கிறது. 24,100 என்ற லெவலை உறுதியுடன் கடந்து செல்லாதவரை, நிப்டி நீடித்த ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு குறைவு.
ஆதரவு 23,550 23,475 23,375
தடுப்பு 23,785 23,925 24,025
