
ரயில் பயணத்தில் உணவு 3 நிறுவனங்கள் கைகோர்ப்பு
ர யில் பயணிகள் கேட்கும் உணவுகளை இருக்கைக்கே வந்து வினியோகம் செய்ய, உணவு வினியோக தளமான ஸ்விக்கியுடன் இக்சிகோ, 'கன்பார்ம் டிக்கெட்' ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் வாயிலாக, நம் நாட்டின் 160க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள 40,000க்கும் அதிகமான உணவகங்களில் இருந்து விருப்பமான உணவை ஆர்டர் செய்யும் வசதி பயணிகளுக்கு கிடைக்கும் என இக்சிகோ மற்றும் கன்பார்ம் டிக்கெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீபாத் வைத்யா கூறியுள்ளார்.
இயற்கை எரிவாயு வினியோகம் 'கெயில் - ஆல்பா காஸ்' ஒப்பந்தம்
வெ ளிநாடுகளில் இருந்து இயற்கை எரிவாயுவை கொண்டு வர கிரீஸ் நாட்டின் 'ஆல்பா காஸ்' நிறுவனத்துடன் கெயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, ஆல்பா காஸின் 'எனர்ஜி பிடலிட்டி' என்ற பிரம்மாண்ட எரிவாயு கப்பலை நீண்ட கால வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த கப்பல் 1.74 லட்சம் கன மீட்டர் எரிவாயுவை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஒப்பந்தத்தால் எரிவாயுவை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் இருந்த சிக்கல்கள் நீங்கி, தடையற்ற எரிசக்தி வினியோகம் உறுதியாக வாய்ப்புள்ளது.

