சென்னையில் போர்டு கார் ஆலை உற்பத்தியை துவக்குவதில் சிக்கல்
சென்னையில் போர்டு கார் ஆலை உற்பத்தியை துவக்குவதில் சிக்கல்
ADDED : செப் 24, 2025 01:49 AM

சென்னை:தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து ஓராண்டாகியும், சென்னை அடுத்த மறைமலை நகரில் உள்ள ஆலையில் கார் உற்பத்தியை, போர்டு நிறுவனம் மீண்டும் துவக்காமல் உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது, 'இந்தியா - அமெரிக்கா இடையிலான வரி பிரச்னை முடிவுக்கு வந்தால் தான் ஆலையை துவக்குவதற்கான அறிவிப்பை வெளியிட முடியும்' என, போர்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரியவந்து உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், அமெரிக்காவை சேர்ந்த போர்டு மோட்டார் கம்பெனிக்கு, 350 ஏக்கரில் கார் தொ ழிற்சாலை உள்ளது.
இங்கு, 2 லட்சம் கார்களும், 3.40 லட்சம் கார் இன்ஜின்களும் உற்பத்தி செய்ய முடியும். இதுவே, இந்திய வாகன துறையில் நிறுவப்பட்ட முதல் உலகளாவிய நிறுவனம் ஆகும். இந்த ஆலை, கடந்த, 2021ல் மூடப்பட்டது.
கடந்த 2024 இறுதியில், அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின், மறைமலை நகர் ஆலையில் கார் உற்பத்தியை மீண்டும் துவக்குமாறு போர்டு நிறுவன அதிகாரிகளிடம் நேரில் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, தொழில் துவங்குவது தொடர்பாக தமிழக அரசிடம், ஒப்புதல் கடிதம் வழங்கியது. ஆனால், ஓராண்டாகியும் மீண்டும் ஆலை துவக்கப்படவில்லை.