எல்.ஐ.சி., சத் பால் பானுாவுக்கு சி.இ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு
எல்.ஐ.சி., சத் பால் பானுாவுக்கு சி.இ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு
ADDED : ஜூன் 09, 2025 12:59 AM

புதுடில்லி:எல்.ஐ.சி.,யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சத் பால் பானுாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
எல்.ஐ.சி., எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த சித்தார்த்த மொஹந்தியின் பதவிக்காலம் கடந்த 7ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, தற்போது நிர்வாக இயக்குநர்களில் மூத்தவரான சத் பால் பானுாவுக்கு, எல்.ஐ.சி.,யின் நிர்வாக இயக்-குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரிக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை அளித்துள்ளது.
பானுா, இம்மாதம் 8ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை அல்லது இப்பதவிக்கு வழக்கமாக ஒருவரை நியமிக்கும் வரை இப்பதவியில் நீடிப்பார்.