இரும்பு தாது ஏற்றுமதி மீதான 30% வரியை கைவிட வலியுறுத்தல்
இரும்பு தாது ஏற்றுமதி மீதான 30% வரியை கைவிட வலியுறுத்தல்
ADDED : செப் 22, 2025 11:22 PM

புதுடில்லி,: 'குறைந்த தரத்திலான இரும்பு தாது ஏற்றுமதிக்கு, வரும் அக்டோபரில் 30 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்தினால், உள்நாட்டில் உற்பத்தி, விலை சரிவு கண்டு, நீண்ட கால நஷ்டத்துக்கு வழி வகுக்கும்' என தொழில்துறையினர் கவலை தெரிவித்து உள்ளனர்.
ஒடிஷாவை சேர்ந்த யு.சி.சி.ஐ.எல்., அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துஉள்ளதாவது:
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ஏற்றுமதி வரியானது, இரும்புத் தாது துறையை சீர்குலைத்து விடும்.
உற்பத்தி குறைந்து, உள்நாட்டில் விலை வீழ்ச்சியடைந்து, இந்தியாவின் ஏற்றுமதி போட்டியை அரித்து, நீண்ட கால நஷ்டத்துக்கு வழிவகுக்கும்.
மேலும், இதன் தாக்கம் வேலைவாய்ப்பு, மாநில பொருளாதாரம் மற்றும் தயாரிப்பு துறையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக 16,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும்.
எனவே, இரும்பு தாது தொழிலை பாதுகாக்க, வரி விதிப்பை கைவிடுமாறு மத்திய அரசுடன், ஒடிஷா அரசு பேச்சு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.