
கச்சாஎண்ணெய்
தற்போதைய சந்தை விலை ஒரு பேரல் 5,454 ரூபாய். ஆதரவு நிலைகள் 5,340 ரூபாய் மற்றும் 5,190 ரூபாய்; எதிர்ப்பு நிலைகள் 5,620 ரூபாய் மற்றும் 5,800 ரூபாய். விலை 5,340 ரூபாய்க்கு மேல் நிலைத்தால் ரூ.5,620 - 5,800 வரை ஏறுவதை எதிர்பார்க்கலாம். ஆனால் ரூ.5,340 என்ற நிலை உடைந்தால், ரூ.5,190 வரை சரிவதற்கான அபாயம் உள்ளது. அமெரிக்காவின் பலவீனமான வேலைவாய்ப்பு தரவுகள், டாலரை பலவீனப்படுத்தி, கச்சா எண்ணெய் விலைக்கு குறுகிய கால ஆதரவாக செயல்படுகிறது. அதே சமயம், ஓபெக் உற்பத்தி கொள்கைகள் மற்றும் மத்திய கிழக்கு புவிசார் அரசியல் பதற்றங்களும், இதன் விலை போக்கில் முக்கிய பங்காற்றுகின்றன.
இயற்கை எரிவாயு
தற்போதைய விலை சந்தை விலை ஒரு எம்.எம்.பி.டி.யு., ரூ.268.20. ஆதரவு நிலைகள் ரூ.253 மற்றும் ரூ.238; எதிர்ப்பு நிலைகள் ரூ.284 மற்றும் ரூ.305. விலை ரூ.253 க்கு மேல் நிலைத்திருந்தால், ரூ.284 - 305 வரை மேல்நோக்கி செல்லலாம். ஆனால் ரூ.253 உடைந்தால், ரூ.238 வரை சரிவதற்கான அபாயம் அதிகம். சீசனல் தேவைகள், உலகளாவிய உற்பத்தி நிலைமைகள் மற்றும் எல்.என்.ஜி., ஏற்றுமதி கொள்கைகள் இதன் விலை மீது நேரடி தாக்கம் செலுத்தும்.
அடிப்படை உலோகங்கள் காப்பர்
தற்போதைய விலை கிலோ ரூ.897.65. ஆதரவு நிலைகள் ரூ.887.55 மற்றும் ரூ.879.45; எதிர்ப்பு நிலைகள் ரூ.909.55 மற்றும் ரூ.922.20. விலை ரூ.887.55 க்கு மேல் நிலைத்தால், ரூ.909.55 - 922.20 நோக்கி செல்லும். ஆனால் ரூ.887.55 எனும் நிலை உடைந்தால், ரூ.879.45 வரை பலவீனமடையும்.
துத்தநாகம்
தற்போதைய விலை கிலோ ரூ.274.85. ஆதரவு நிலைகள் ரூ.269.90 மற்றும் ரூ.266; எதிர்ப்பு நிலைகள் ரூ.277.55 மற்றும் ரூ.282. விலை ரூ.269.90 க்கு மேல் இருந்தால் ரூ.277.55 - 282 வரை ஏற்றம் காணலாம். ஆனால் ரூ.269.90 உடைந்தால், விலை 266 வரை சரிவதற்கான வாய்ப்பு உள்ளது.
மொத்த நிலவரம்
அடிப்படை உலோகங்களுக்கு உலகளாவிய தொழில்துறை தேவை, சீனாவின் உற்பத்தி தரவுகள், மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நிலைமைகள் முக்கிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பலவீனமான டாலர் விலை ஆதரவாக இருக்கும், ஆனால் சப்ளை அதிகரித்தால் அழுத்தம் உருவாகலாம்.