அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சை தொடர மத்திய அரசு முடிவு
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சை தொடர மத்திய அரசு முடிவு
ADDED : செப் 27, 2025 12:19 AM

புதுடில்லி:இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய வகையில், வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சை தொடர முடிவு செய்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 22 முதல் 24ம் தேதி வரை, அமெரிக்கா சென்றிருந்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான குழு, அமெரிக்க அரசின் அதிகாரிகளுடன், இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆலோசித்தது. மேலும், இந்த குழு, இரு நாடுகள் இடையே வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்கும் அமெரிக்க தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களை சந்தித்து பேசியது.
அப்போது, இரு தரப்பிலும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள, சாதகமான வரையறை குறித்து கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
தொடர்ந்து இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய வகையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள, பேச்சை தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.