'3 நானோ மீட்டர் சிப்' வடிவமைப்பு மையம் இந்தியாவில் முதல் முறையாக துவக்கம்
'3 நானோ மீட்டர் சிப்' வடிவமைப்பு மையம் இந்தியாவில் முதல் முறையாக துவக்கம்
ADDED : மே 15, 2025 01:41 AM

புதுடில்லி:இந்தியாவிலேயே முதன்முறையாக, '3 நானோ மீட்டர்' சிப்கள் வடிவமைக்கும் மையங்களை 'ரெனேசாஸ் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா' என்ற நிறுவனம், நொய்டா மற்றும் பெங்களூரு நகரங்களில் அமைத்துள்ளது.
இந்த மையங்களை துவக்கி வைத்தபின், அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது:
இந்தியாவில், இதுவரை 7 மற்றும் 5 நானோ மீட்டர் சிப்கள் தான் வடிவமைக்கப்பட்டு வந்தன. ஆனால், முதன்முறையாக, தற்போது 3 நானோ மீட்டர் சிப்கள் வடிவமைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பான அனைத்து பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. வடிவமைப்பு, உற்பத்தி, அசெம்பிளிங், சோதனை, பேக்கேஜிங், உபகரணங்கள், ரசாயனங்கள், எரிவாயு வினியோகம் என அனைத்தையும் உள்ளடக்கியதாகவே அரசின் கொள்கை உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, பொறியியல் மாணவர்களின் வன் பொருள் திறனை மேம்படுத்தும் வகையில், புதிய செமிகண்டக்டர் கற்றல் பயிற்சியை அமைச்சர் துவக்கி வைத்தார். நாடு முழுதும் 270க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களில் இந்த பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த சிப்கள், அதிக செயல்திறன் கொண்டதாகவும், அதிநவீன தொழில்நுட்பங்களில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்