/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
எஸ்.பி.ஐ., தமிழகத்தில் புதிதாக 14 கிளைகளை திறந்தது
/
எஸ்.பி.ஐ., தமிழகத்தில் புதிதாக 14 கிளைகளை திறந்தது
எஸ்.பி.ஐ., தமிழகத்தில் புதிதாக 14 கிளைகளை திறந்தது
எஸ்.பி.ஐ., தமிழகத்தில் புதிதாக 14 கிளைகளை திறந்தது
ADDED : செப் 22, 2025 11:07 PM

சென்னை : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., தமிழகத்தில் 14 புதிய கிளைகள், 2 வீட்டு கடன் மையங்கள், 2 நவீன கிராமப்புற சுயதொழில் பயிற்சி மையங்களை திறந்து, மாநிலத்தில் தன் இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது தவிர, கரன்சி நிர்வாகத்துக்கு என சிறப்பு கிளை ஒன்றையும் துவங்கியுள்ளது.
சமீபத்தில் எஸ்.பி.ஐ., சென்னை தலைமையகம் வந்த வங்கியின் தலைவர் சி.எஸ்., செட்டி, இந்த புதிய கிளைகள் மற்றும் மையங்களை திறந்து வைத்ததாக, வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மாநிலம் முழுதும் 110 கிராம பஞ்சாயத்து முகாம்களையும் அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக சி.எஸ்., செட்டி தெரிவித்து உள்ளதாவது:
நாடு முழுதும் 22,980க்கும் மேலான கிளைகளுடன் மிகப்பெரிய வங்கியாக எஸ்.பி.ஐ., செயல்படுகிறது. இருப்பினும், வங்கி சேவை கள் சென்றடையாத பகுதிகளில் கவனம் செலுத்துகிறோம்.
புதிய கிளைகள் வாயிலாக மக்களிடையே நேரடி தொடர்பை வலுப்படுத்துவதோடு, கிராம பஞ்சாயத்து முகாம்கள் வழியாக கடைக்கோடி மக்களுக்கும் நிதி சேவைகள் கிடைக்கச் செய்ய முயற்சி எடுக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.