/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமி கூட்டு பலாத்காரம் இரண்டு சிறுவர்கள் கைது
/
சிறுமி கூட்டு பலாத்காரம் இரண்டு சிறுவர்கள் கைது
ADDED : ஜூன் 23, 2025 11:28 PM
தாவணகெரே: விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலத்காரம் செய்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தாவணகெரேவின், கிராமம் ஒன்றில் 7 வயது சிறுமி வசிக்கிறாள். இவளது அக்கம் பக்கத்தில் 15 மற்றும் 17 வயதில் இரண்டு சிறுவர்கள் வசிக்கின்றனர். நேற்று முன் தினம் பள்ளிக்கு விடுமுறை இருந்ததால், சிறுமி தன் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது பக்கத்து வீட்டு சிறுவன் அங்கு வந்தான். தனியாக இருப்பதை கவனித்து, சிறுமியிடம் பேச்சு கொடுத்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு, மற்றொரு சிறுவனும் இருந்தான். வீட்டுக்குள் சென்ற பின், இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
வெளியே விளையாடிய மகளை காணாமல் தேடிய பெற்றோர், பக்கத்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, பலாத்காரம் நடந்திருப்பது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார், இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர். இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.